ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விறுவிறு மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு முன்னராக மாதிரி வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய தேர்தலாக மாறியுள்ளது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.பொது தேர்தல் பரபரப்புக்கு சற்றும் குறையாமல் இந்த தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,27,543 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் ஆண் வாக்காளர்களும், சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பெண் வாக்காளர்களும் இன்று வாக்களிக்க உள்ளனர்.
7 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்னர் அங்குள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் அல்லது மற்ற யாரேனும் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவர். அதே போல தற்போதும் தேர்தல் சின்னம் சரியாகதான் வேலை செய்கிறதா என சோதனை செய்யும் வகையில் மாதிரி வாக்குகிப்பதிவு நடத்தப்பட்டது.
காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உட்பட மொத்தமாக 77 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காணுகின்றனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 5 வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளன. மொத்தம் 738 வாக்குச்சாவடியில் 33 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என குறிப்பிடப்பட்டு அந்த வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பது அளிக்கப்பட்டுள்ளது.