வலுவிழந்தது மோக்கா புயல்.! வங்காளதேச கடலோரம் பாதிப்பு….

மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெ ரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இதனால் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டன.
மழை:
இன்று முதல் 16-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17,18 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.