மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14-ஆம் வரை செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ம் தேதி ‘மோச்சா’ புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ராமசந்திரன் அவர்கள், மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14-ஆம் வரை செல்ல வேண்டாம் என்றும், வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…