உருவானது மோச்சா புயல் – இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் : அமைச்சர் ராமசந்திரன்

kkssr ramasanthiran

மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14-ஆம் வரை செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல். 

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.

‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ம் தேதி ‘மோச்சா’ புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ராமசந்திரன் அவர்கள், மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14-ஆம் வரை செல்ல வேண்டாம் என்றும்,  வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்