காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கம்..!
இணையதள காணொளி மூலம் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என அறிவித்தார்.
பொதுமக்கள் காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கம். மேலும், இணையதள காணொளி மூலம் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.