கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமக பொதுக்குழு கூட்டத்தில் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணையும் என அறிவித்தார்.
பின்னர், இதுகுறித்து கூறிய கமல், இருவரும் கைகுலுக்கி கொண்டோம் என்பது உண்மை விரைவில் விரிவாக சொல்கிறோம் என கூறினார். மேலும், தன்னை முதல்வராக முன்மொழிந்த சரத்குமாருக்கு நன்றி எனவும் கமலஹாசன் கூறியிருந்தார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…