#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு.! கமல்ஹாசன் அறிவிப்பு.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஈவிகேஎஸ்..இளங்கோவன் அவர்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிப்பதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிய சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது.
வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் : காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்க உள்ளார். இதனை ஒட்டி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் ஆதரவு : இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், வரும் இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நிபந்தனையற்ற ஆதரவு : மேலும் அவர் கூறுகையில், வீட்டில் ஒரு இழப்பை சந்தித்து, ஒரு இக்கட்டான சூழ்நிலையும், மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். இந்த மதற்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும், இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் வெல்ல வேண்டிய உதவிகளை செய்வோம். எனவும் இந்த முடிவு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்டது எனவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.