நாளை திமுகவில் இணைகிறார் ம.நீ.ம. மகேந்திரன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார். சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது.
இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அப்போது, மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.
மேலும், அக்கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் மகேந்திரனை துரோகி என விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்பின் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை மாலை 5 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்க மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்வை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025