மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?
Kamal Haasan : திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பரப்புரை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
Read More – கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.!
இதன் காரணமாக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் ஒருபக்கம் வலுவான கூட்டணியுடன் திமுக தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், மறுபக்கம் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தனித்னியே தங்களது கூட்டணியை அமைக்க முனைப்பு காட்டி, பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில், மக்களை நீதி மய்யம் இன்று திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன், இந்த முறை திமுக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது.
Read More – மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!
அண்மையில் கமல்ஹாசன் கூறியதாவது, மக்களவை தேர்தலின் நிலைப்பாடு குறித்து ஒரு சில நாட்களில் அறிவிப்போம் என தெரிவித்திருந்த நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கமல் யாருடன் கூட்டணி அமைப்பார் என பல்வேறு கேள்விகள் எழுந்தது.
இருப்பினும், திமுகவுடன் தான் கமல்ஹாசன் கூட்டணி வைப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் கமல்ஹாசன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
Read More – சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
இதனை உறுதி செய்யும் விதமாக சென்னையில் இன்று நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என மநீம தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது.
மேலும், தக் லைப் படப்பிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் செரிபியா செல்ல இருந்த நிலையில், அந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இன்று மநீம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள கமல்ஹாசன், தொகுதி பங்கீடு மற்றும் மக்களவை தேர்தல் முடியும் வரை வெளிநாட்டு பயணங்களை கமல் ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.