காவல்துறை நடவடிக்கையால் கோவை மக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர்.! அமைச்சர் விளக்கம்.!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டனர். – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும், அதன் மீதான தமிழக அரசு முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், கார் சிலிண்டர் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 12 மணிநேரத்தில் கண்டறியப்பட்டனர். அவர்களை 24 மணிநேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாருக்கும் பதட்டமான சூழ்நிலை பரவிவிடகூடாது என துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டனர்.
ஒரு சிலர் கோவையில் எதோ பதட்டமான சூழ்நிலைஇருப்பதாக தகவல்களை பரப்புகின்றனர். விசரணையில் எந்த வித குறுக்கீடோ, ஒளிவுமறைவோ இல்லை. குற்றவாளிகள் வேறு மாநிலங்கள் தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணை அடுத்தகட்ட நகர்வுக்காக தான் என்ஐஏ வசம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலினும் இந்த விசாரணை தொடர்பாக ஆலோசனை கூட்டத்தினையும் நடத்தி, அதன் பிறகு தான் விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. ‘ என கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.