#Breaking: எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி எம்.பி யாக வெற்றி..!
மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா தேர்வு.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டதாலும், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரும் அறிவிக்கப்படாததாலும் மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். வருகின்ற 2025 ஜூலை 24-ஆம் தேதி வரை அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார் எனவும் அப்துல்லா மூலம் மாநிலங்களவையில் திமுகவின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இவர் திமுகவில் 1993 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.