கூவத்தூர் விடுதியாக மாறும் குற்றால விடுதி …!குற்றாலத்தில் தனியார் விடுதியில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்…!

Default Image

நெல்லை மாவட்டம்  குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதி தகுதி நீக்க எம்எல்ஏக்கள் சிலர் வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
Image result for தினகரன்
மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.

பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்தார்.அதன்படி ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினார் நீதிபதி சத்யநாராயணன்.
Image result for தினகரன்

நீதிபதி சத்யநாராயணன் முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
நீதிபதி சத்யநாராயணன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
Image result for தினகரன்

இன்று  தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Image result for KUTRALAM ISAKI HIGHWAY RESORT
இந்நிலையில்  குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு  தகுதி நீக்க எம்எல்ஏக்கள் சிலர் வந்துள்ளனர்.குறிப்பாக தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், சுப்பிரமணியன், கதிர்காமு உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்