தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்…! மதுரையில் டி.டி.வி தினகரன் அவசர ஆலோசனை…!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.
நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார் டிடிவி தினகரன்.அதேபோல் குற்றாலத்தில் உள்ள எம்எல்ஏக்களும் மதுரைக்கு விரைந்தனர்.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.