கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்ஏ-வாக விஜயதரணி உள்ளார். 3-வது முறையாக விஜயதரணி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதரணி இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தேசிய கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜே.பி நட்டா முன்னிலையில் விஜயதரணி கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜயதரணி விளவங்கோடு எம்எல்ஏ ஆக உள்ளதால் குமரி தொகுதியை விஜயதரணிக்கு தர கட்சி மேலிடம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!
இதனால் கடந்த சில தினங்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைவார் என செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு ஏற்றாற்போல சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் பங்கேற்காமல் கடந்த வாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் எம்.எல்ஏ விஜயதரணி முகாமிட்டிருந்தார்.
இதுகுறித்து எம்.எல்ஏ விஜயதரணி கூறுகையில்” பாஜகவில் தான் இணையப் போவதாக பரவும் செய்திகளைப் பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, இன்று இணைவதற்கான வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார். பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…