பாஜகவுக்கு தாவுகிறாரா எம்.எல்ஏ விஜயதரணி..?

Vijayadharani

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்ஏ-வாக விஜயதரணி உள்ளார். 3-வது முறையாக விஜயதரணி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதரணி இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தேசிய கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜே.பி நட்டா முன்னிலையில் விஜயதரணி கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜயதரணி விளவங்கோடு எம்எல்ஏ ஆக உள்ளதால் குமரி தொகுதியை விஜயதரணிக்கு தர கட்சி மேலிடம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

இதனால் கடந்த சில தினங்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைவார் என செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு ஏற்றாற்போல  சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் பங்கேற்காமல் கடந்த வாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் எம்.எல்ஏ விஜயதரணி முகாமிட்டிருந்தார்.

இதுகுறித்து எம்.எல்ஏ விஜயதரணி கூறுகையில்” பாஜகவில் தான் இணையப் போவதாக பரவும் செய்திகளைப் பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, இன்று இணைவதற்கான வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார். பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்