கோவை கார் விபத்து.! முதல்வர் ஏன் வாய்திறக்கவில்லை.! எம்.எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.!
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வாயை கூட திறக்காமல் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் அமைச்சர்கள் மூலம் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் இது பற்றி ஏதும் கூற மறுக்கிறார். என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலர், தலைமை செயலர் உடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ நமது முதல்வர் தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்ல மாட்டார் . கோவையில் இதற்கு மும்பு 1998 குண்டு வெடிப்பில் இந்து அமைப்பு தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ‘ இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வாயை கூட திறக்காமல் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் அமைச்சர்கள் மூலம் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் இது பற்றி ஏதும் கூற மறுக்கிறார். ‘ என குறிப்பிட்டார்.
அடுத்ததாக, ‘ காவல்துறையினர் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், உளவுத்துறை செயல் இழந்துள்ளது இந்த சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது. 70 கிலோ வெடிமருந்து கைப்பற்ற பட்டுள்ளது. ஆதலால், இந்த வழக்கை ஈகோ பார்க்காமல், தமிழக காவல்துறை என்ஐஏ-விடம் ஒப்படைக்க வேண்டும். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்.’ என குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.