தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி சாலையோரத்தில் விநாயகர் கோயில் ஓன்று அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில் அமைந்துள்ளதால், அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் கோயிலை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் மக்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோயில் அகற்றப்படாது என உறுதியளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தொலைபேசி மூலம் எம்எல்ஏ கீதாஜீவனிடம் பேசினார்.
அப்போது, கோயில் இடிக்கப்படாது என தெரிவித்தார், பின்னர் போராட்டம் கைவிடபட்டது.
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…