பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி.? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
Ponmudi : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மேல்முறையீடு செய்திருந்தனர். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் பொன்முடி சிறைக்கு செல்வது தவிர்க்கப்பட்டது. இருப்பினும், ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.
Read More – திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி!
இந்த சூழலில் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்ததை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவை நேற்று பிறப்பித்தது உச்சநீதிமன்றம். எனவே, பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் இழந்த எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Read More – திமுக கூட்டணி : நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.!
இந்த நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதித்து உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் என் கைக்கு வந்தவுடன் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
வயநாடு எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் எப்படி பதவியைப் பெற்றாரோ அதே போன்று பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் விளக்கமளித்தார்.