காரை மறித்து வெள்ளைத்தாளில் எம்.எல்.ஏவை கையெழுத்து போட வைத்த அரசு பள்ளி மாணவர்கள்!எதற்கு என்று தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.இதனை தமிழக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில் 2017-2018 ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டில் படித்து முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதனை மாணவர்களுக்கு வழங்க மானமதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் வந்தார்.மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கிய போது மடிக்கணினி வாங்காத பழைய மாணவர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பியது இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கொம்புகாரனேந்தல் அரசு பள்ளியில் மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்த தகவலை அறிந்த கட்டிக்குளம் கிராம மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினரின் காரை இடை மறித்து போராட்டத்தில் இறங்கினார்.அங்கு விரைந்த போலிசார் மாணவர்களிடம் சமாதானம் பேசினார் ஆனால் மாணவர்கள் அசைந்து கொடுக்கவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.கடும் கோபத்தோடு சட்டமன்ற உறுப்பினரை அணுகினர்.
இந்த குழப்பம் நிறைந்த சம்பவத்தை உற்று நோக்கி கொண்டிருந்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ நாகராஜன் கட்டிக்குளம் அரசு பள்ளியில் பயின்ற 2017-2018 மற்றும் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கமால் தற்போது பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க மாட்டேன்.என்று வெள்ளைத்தாளில் எழுதி பச்சை மை பேனாவால் கையெழுத்து போட்டு அதை மாணவர்களிடம் கொடுத்தார்.
வெள்ளைப் பேப்பரில் எம்எல்ஏ வை மாணவர்கள் கையெழுத்து இட வைத்த சம்பவம் பரபரப்பாக அந்த பகுதிகளில் பேசப்பட்டது.