ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

Default Image

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது .

தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிது பின்னடைவை கண்ட அவர் உடல் சற்று முன்னேற்றம் கண்டதாவும் 90% ஆக்ஸிஜன் தேவைப்பட்ட நிலையில் 40% தேவையாக குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்  மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அதன் பின் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வந்தது.  இன்று மாலையில் இருந்து அவரது உடல் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.மீண்டும் அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும்  சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதகவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்