#BreakingNews : சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் – முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு ,மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.
மேலும் ஒரு சில மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றன.அந்த வகையில் நேற்று 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிடைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமிக்கு ,எதிர்க்கட்சித்தலைவரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கழக தலைவர் @mkstalin அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டி, பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றக்கோரி, மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு எழுதியுள்ள கடித விவரம்:
Link: https://t.co/45wV19lhVz#DMKforFarmers pic.twitter.com/vYwU4qfHfM
— DMK (@arivalayam) January 1, 2021