MKStalin : மாணவர்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அனிதா தான் நினைவுக்கு வருவார்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஒருவாரத்திற்குள் இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் தொகுதி கொளத்தூர். இந்த தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் திகட்டாது.
இந்த தொகுதிக்கு இன்று வரக்கூடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எதற்காக என்றால் இன்று மாணவர்களுக்கு உதவுவது தான்.
அமைச்சர், மாவட்ட செயலாளர் சேகர்பாபுவை எப்போதும் நான் செயல் பாபு என்று தான் கூறுவேன். எல்லா நிகழ்ச்சியையும் சிறப்பாக தான் அவர் செய்வார். அதில் கலந்து கொள்வதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான் .
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டதில் இருந்து எப்போதெல்லாம் நான் கலந்து கொல்கிறோனோ அப்போதெல்லாம் நான் கூறுவது ஒன்றே ஒன்று தான். மாணவர்கள் தங்கள் திறனை மேம்பபடுத்த வேண்டும். அதற்காக தான் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது.
ஓவ்வொரு முறை மாணவர்களுக்கு உதவி வழங்கும் போது மறைந்த அனிதா தான் என் நினைவில் வருவார். நீட்டிற்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோமோ அப்போது தான் அனிதாவுக்கு நாம் உண்மையாக அஞ்சலி செலுத்தும் நாள். அனிதா ஆரம்பித்து சமீபத்தில் ஜெகதீசன் வரையில் அதனை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த அகாடமியில் 743 மாணவிகள் இலவச டாலி (Tally) பயிர்ச்சி பெற்று லேப்டம் பெற்றுள்ளனர். இதுவரை 5 பேட்ச் முடித்து 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் டாலி (Tally) பயிர்ச்சி பெற்று லேப்டம் பெற்றுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு தையல் எந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று 389 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் தனித்திறமை கொண்டவர்களாக வர வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது தான் எனது கனவு திட்டம். இதில் 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டோம். ஆனால், 13 லட்சம் மாணவர்கள் இதில் பயன்பெற்று அவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. அனைத்து துறை வளர்ச்சி தான் நமது ஆட்சியின் முக்கியத்துவம்.
காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவை நமது ஆட்சியின் முக்கிய திட்டங்கள் ஆகும். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் துவங்கப்பட உள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினார்.