“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published by
Venu
“கொரோனா கட்டுக்குள் வரும்வரை நீட், JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்”  என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் மற்றும் JEE-2020 தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சர்   ரமேஷ் பொக்ரியாலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,  தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 2020-ஆம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாக தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கொரோனா வைரஸ் பேரழிவு மட்டுமில்லாது, மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய சமீபத்திய வெள்ளப் பாதிப்புகளில் இருந்தும் பல பகுதிகள் இன்னும் மீள வேண்டியிருக்கிறது.
இந்த நெருக்கடியான நேரத்தைச் சமாளிக்கும் முயற்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது பொதுப் போக்குவரத்திற்கும் தடைகள் உள்ள நிலையில், தேர்வு மையங்களை அனைவரும் அணுக முடியாத சூழல் நிலவுகிறது மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு மையங்களைச் சென்றடைவது இயலாத ஒன்றாகும். இது, வசதி வாய்ப்புப் பெற்றுள்ள அவர்களது சக தேர்வர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பெறும் கெடுவாய்ப்பாகும்.
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் கடந்த மார்ச் 24, 2020 அன்று தமிழக அரசால் நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், ஏறத்தாழ 35,000 மாணவர்கள் பங்குபெறவில்லை என்பது இதனைத் தெளிவாக உணர்த்தும். இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று தெரிகிறது. அதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான அல்லது அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதற்கான சோதனை நடைபெறுவதைத் தேசிய தேர்வு முகமை கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் ஏதுமற்றவர்கள் என்பதன் அடிப்படையில், மாணவர்கள் தாமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது எந்தவகையிலும் பயனளிக்கும் வழியாகத் தோன்றவில்லை. தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது. மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். மேலே குறிப்பிட்ட கடும் இடர்ப்பாடுகளின் அடிப்படையில், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜெ.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Published by
Venu

Recent Posts

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்! 

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

6 minutes ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

42 minutes ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

56 minutes ago

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…

1 hour ago

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

12 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

12 hours ago