“கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

mk stalin modi

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன் பேசி தமிழ்நாடு மீனவர்கள், அவர்தம் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுத்திருக்கிறார்.

மேலும் அவரது கடிதத்தில், ”பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது என்பதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment