“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!
UGC வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் எழுதிய அந்த கடிதத்தில், “புதிய யு.ஜி.சி. வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும். இது மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மாநில பல்கலை.களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும். இதனால், யுஜிசி விதிகளை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா கூட்டணி முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுவதாகவும், வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்பதைத் தாம் குறிப்பிட விரும்புவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என டெல்லி, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும்… pic.twitter.com/SF8ziliEAp
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 20, 2025