தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம்: 7 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

MKStalin

சென்னை : 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று கூடியது.

அந்த கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ” இந்திய மக்களாட்சி முறையின் சாராம்சம் அதன் கூட்டாட்சித் தன்மையில்தான் அமைந்துள்ளது என்றும், ஒரே நாடாக நமது மதிப்புறு ஒற்றுமையைப் போற்றும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் உரிமைக் குரலை எழுப்ப உதவிடும் ஒரு அமைப்பாகவும் மக்களாட்சி முறை உள்ளது என்றும், நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மைப்போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாகக் குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், இன்று நான் அதுகுறித்து முக்கியமாக தங்களுக்கு கடிதம் எழுதுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு தமது கடிதத்தில் விவரித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும் என்றும் தமது கடிதத்தில்  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டாய், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும். இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும் மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்ப்பதாகவும் தமது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை செய்யும் முறை என்பது எளிமையானது என்றும், இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும், முதல் நேர்வில், தற்போதுள்ள 543 இடங்களை மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்யலாம் என்றும், இரண்டாவது நேர்வில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 800-க்கு மேல் அதிகரிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் பின்வருமாறு…

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்