அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது.
இதன் முன்னோட்டமாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை கிழக்கு மண்டலங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி
சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் வடக்கு மண்டலங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இன்று மாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.