மு.க.ஸ்டாலின் உடல்நிலை ..!வைகோ அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு ..!
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனைக்கு ஸ்டாலினை நலம் விசாரிக்க சென்றார்.
திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தது.
இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.பின்னர் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று நலம் விசாரித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார், அவரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.