இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
இம்மானுவேல் சேகரன் 1924 ம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி பிறந்தார். அவரை 1957ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் இன்று அவரது 63 ஆவது நினைவு நாள்.
இவரது நினைவு நாளை முன்னிட்டு பலர் தங்களுது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த அவகையில், இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது 18-வது வயதில் கைதாகி – தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர் -வீரர் திரு. இம்மானுவேல் சேகரன்.அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாள்
தேவேந்திர குல வேளாளர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அவருக்கு, 2010-ல் கழகம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு – மத்தியில் கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தபால் தலை வெளியிடப்பட்டது.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தக்கதொரு தீர்வை விரைவில் கண்டிட வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் – மத்திய அரசையும் தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும் என்ற உறுதியை வீரர் நினைவு தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. இம்மானுவேல் சேகரன் புகழ் என்றும் நிலைத்தோங்கி நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…