இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!

Default Image

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

இம்மானுவேல் சேகரன் 1924 ம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி பிறந்தார். அவரை 1957ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் இன்று அவரது 63 ஆவது நினைவு நாள்.

இவரது நினைவு நாளை முன்னிட்டு பலர் தங்களுது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த அவகையில், இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது  18-வது வயதில் கைதாகி – தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர் -வீரர் திரு. இம்மானுவேல் சேகரன்.அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாள்

தேவேந்திர குல வேளாளர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அவருக்கு, 2010-ல் கழகம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு – மத்தியில் கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தபால் தலை வெளியிடப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தக்கதொரு தீர்வை விரைவில் கண்டிட வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் – மத்திய அரசையும் தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும் என்ற உறுதியை வீரர் நினைவு தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. இம்மானுவேல் சேகரன் புகழ் என்றும் நிலைத்தோங்கி நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்