தொண்டு நிறுவனங்களுடன் முதல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 30 தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 30 தொண்டு நிறுவனங்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025