மத்திய அரசுக்கு அழுத்தம் தர தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தர சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி,மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா ,ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட 13 பேருடன் பேசியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…