திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர்.இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
எனவே திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என்று செப்டம்பர் 9-ஆம் தேதி திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…