மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பரப்புரை..!

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் உள்ள 9 தொகுதிகளில் இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், முக ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டபோது கலைஞர் எனக்காக வாக்கு சேகரித்து நினைவுக்கு வருகிறது என தெரிவித்தார்.