#BREAKING: சென்னை நீதிமன்றத்தில் மு.க ஸ்டாலின் ஆஜர்..!
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறாக பேசியதாக கூறி 6 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ காண சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருந்ததால் அதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு இருந்த நிலையில், தற்போது இந்த 6 வழக்கு தொடர்பாக இன்று முதல் முறையாக ஸ்டாலின் ஆஜராகியுள்ளார்.