மு.க.ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்…!திமுகவில் சேர்ந்தவுடன் அதிரடியில் இறங்கிய செந்தில் பாலாஜி …!
மு.க.ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.
இதன் பின்னர் செந்தில் பாலாஜி கூறுகையில்,தளபதி அவர்களை சிறந்த தலைவராக பார்க்கிறேன்.அம்மா அவர்களின் இறப்பிற்கு பின்னர் மற்றொரு இயக்கத்தில் இணைந்து இருந்தேன். தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவர் மு.க ஸ்டாலின்.தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தளபதி ஸ்டாலின் அவர்களை நிச்சயமாக வெற்றி பெற செய்வேன்.தளபதி அவர்களின் ஈர்ப்பால் நான் திமுகவில் இணைத்துள்ளேன்.என் மனதில் இருந்த இருளை நீக்கி வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உதய சூரியன்.மக்களின் விருப்பம் நான் திமுகவில் இருப்பதுதான் இபிஎஸ் – ஓபிஎஸ் அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது மக்களுக்கு எதிரான செயல்களை அதிமுக செய்து வருகிறது திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசுக்கு எதிராக போராடி வருகிறார்.அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டால் போட்டியிடுவேன்.அதுவும் மு.க.ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.