மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது.
நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதேபோல் இன்று இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க மட்டும் தான் வந்தேன். விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர்.அரசியல் குறித்து பேசவரவில்லை.கருணாநிதி மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் விஜயகாந்த்.கருணாநிதி மறைந்தபோது வெளிநாட்டில் இருந்தார் விஜயகாந்த்.அப்போது வீடியோவில் கருணாநிதி மறைவை தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது .நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுதது மறக்க முடியாததுஎன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…