'அதிமுகவின் விளம்பர வெறி! மேலும் ஒரு பெண் பாதிப்பு!' – மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கண்டனம்!
சில மாதங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ என்பவர் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார் அப்போது பின்னால் வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பேனர் வைத்த அதிமுக் பிரமுகர் ஜெயகோபால் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை சிங்காநல்லுர் பகுதியை சேர்ந்த அனுராதா என்ற பெண் தான் வேலை செய்யும் சின்னியம்பாளையத்திற்கு செல்லும் வழியில் கோல்டுவின்ஸ் சாலையில் செல்லும்போது அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பம் விழுந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி காலில் பலத்த அடிபட்டது. இதனை அடுத்து அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக கோடி கம்பம் சரிந்து விழுந்து தான் இந்த விபத்து ஏற்பட்டது என கூறப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான கண்டனத்தை பதிவு சேட்டுள்ளார்.அதில், கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? ‘ என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.
அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? pic.twitter.com/rnCYxm9Gdj— M.K.Stalin (@mkstalin) November 11, 2019