தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளுடன் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது.
திமுக சார்பில் விருப்ப மனு கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலிலும், 9-ம் தேதி திண்டுக்கல், மதுரையில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு…
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ்…