மு.க.ஸ்டாலின் -தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு!எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை
மு.க.ஸ்டாலின் -தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதனால் 3-ஆம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.3-வது அணி அமைப்பதால் எங்களுக்கு கவலையில்லை, பாஜக வலிமையாக இருப்பதால் தான் இதுபோன்ற சந்திப்புகள் நடக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.