பாஜக வென்றால் இந்த நிலை ஏற்படும்! மு.க. ஸ்டாலின் பேச்சு
M.K.Stalin:மக்களவை தேர்தலுக்கான திருவாரூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாழ்க்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையடுத்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார். இன்று திருவாரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு முதல்வர் பேசினார்.
Read More – நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்.!
அவர் பேசும் போது, “அதிமுக வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் பம்மாத்து அறிக்கை. 2019 மக்களவை தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பட்டனை அழுத்திய போது அருகில் எடப்பாடி பழனிச்சாமி கைத்தட்டினார், அதன் பின் எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என ஒருமுறையாவது மத்திய அரசின் கதவை தட்டினீர்களா?
Read More – திமுக vs அதிமுக தான்.. பாஜக ஒண்ணுமேயில்லை.. எஸ்.பி.வேலுமணி அதிரடி.!
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றுகிறது. 1.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்கிறது. பாஜக வெற்றி பெற்றால் ஜம்மு காஷ்மீர் நிலை தான் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும், அக்கட்சி நாட்டை மிக மோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமான அத்தனையும் செய்துவிட்டு பாஜக ஆடும் ஆட்டம் அழுகுனி ஆட்டம்” என விமர்சித்துள்ளார்.