வாட்சாப்களில் வாந்தி எடுப்பவர்களை நினைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.! மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Default Image

எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. – டிவிட்டர் ஸ்பேசில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். 

வருடா வருடம் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக தமிழகத்தில் கொண்டப்பட்டு வருகிறது. நேற்று செப்டம்பர் 30 திராவிட மாடல் கடைசி நாள் என்பதால், முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ திராவிடம் தமிழகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. சமூக நீதியை நிலை நாட்டியது. பெண்களுக்கு சம உரிமையை பெற்று கொடுத்தது. திராவிடம் தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது திராவிடம்  தான்.

தொழில் நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத்தில் இயங்கும் நீங்கள் உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளை சொல்லுங்கள், நமது கொள்கையை எடுத்து சொல்லுங்கள். தவறான தகவலாக இருந்தால் அதற்கான உண்மையான தகவலை சொல்லுங்கள்.

நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது என்பதை சிந்தித்து பார்த்தாலே திராவிட இயக்கத்தின் சாதனைகள் அனைவருக்கும் தெரியும். எனவே பொய் செய்திகளுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதே நேரத்தில் ஒரு செய்தி வந்தால் அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் அளவுக்கு பொய் செய்திகளை பரப்பி விளையாடலாம் என நினைப்பவர்களுக்கு பதிலடி கவுண்டர் அடித்து பாடம் புகட்டுங்கள்” என முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்