என்னுடைய தந்தை குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியுள்ளார் என்று பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சரக்கு பெட்டகம் மாற்றுமுனையம் வராது என அறிவித்தும், திமுகவினர் மக்களிடையே போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். கன்னியாகுமரி தொகுதியை பற்றி ஸ்டாலினுக்கு என தெரியும்? என தொகுதி மக்களுக்கு எதும் செய்யவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
நெல்லை எங்கள் எல்லை, குமாரி எங்கள் தொல்லை என்று கூறியது திமுக. பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை, பொய் ராதாகிருஷ்ணன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மிக கேவலமான முறையில் எனது தந்தையை பற்றி பேசியுள்ளார். என் பேரின் இனிசியலை மாற்றுவதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என ஆவேசமாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவருடத்திற்கு முன்பு நான் சார்ந்திருக்கக்கூடிய சாதியை பற்றி முக ஸ்டாலின் கேவலமாக பேசினார் என குற்றசாட்டியுள்ளார். இதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆகையால் முக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் பொய் என்று சொல்லட்டும், ஆனா, பொய் ராதாகிருஷ்ணன் என சொல்வது, எனது தந்தையின் பெயரை மாற்றுவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…