அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் ! பத்மஶ்ரீ விருது வென்றவருக்கு ஸ்டாலின் வாழ்த்து
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது ,திமுகவிற்கு கிடைத்திருக்கும் பெருமை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாப்பம்மாள் என்பவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். முதலில் மளிகை கடையில் தொடக்கி தற்போது விவசாயம் செய்து வருகிறார்.இது மட்டும் இல்லாமல் அரசியல் ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே திமுகவில் இருந்து வருகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை விவசாயம் செய்து வரும் அவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கழக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர்.அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது!
இது கழகத்துக்கும் பெருமை!
அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர்.
அவருக்கும் #PadmaAwards பெற்ற தமிழகச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/FD1ikN1gp0
— M.K.Stalin (@mkstalin) January 26, 2021