7.5 % இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு பாதுகாத்திட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.அதில், புதுச்சேரி மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால், நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போக செய்யும் என மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில் உள்ள 7.5% இட ஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களது கவனத்திற்கு வரவில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது” என்று புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
“கிராமப்புற & நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட்டு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/kxsmXA6CmZ pic.twitter.com/AFlz4cMzvG
— DMK (@arivalayam) January 22, 2021