மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து,இலவச ரயில் பயணம்.!திமுக தேர்தல் அறிக்கையின் முழு விவரம் இதோ….

Published by
லீனா

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.

  1. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், தமிழிலேயே செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
  2. வேளாண்மை துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
  3. மத்திய அரசின் வருவாயில் 60% மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சியடைய நிதி பங்கீடு செய்யப்படும்.
  4. மத்திய நிதிக்குழுவின் அமைப்பும், அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
  5. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
  6. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தப்பட்சம் ரூ.8000-ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  7. பாஜக அரசால் சிதைந்து போன இந்தியா பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.
  8. தனிநபர் வருமான ஆண்டுக்கு ரூ.86,689-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
  9. நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல்,எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நிர்வகிக்கப்பட்ட விலைமுறை கொண்டுவரப்படும்.
  10. சமையல் எரிவாயுக்கான மானிய தொகை வாங்கி கணக்கில் திரும்ப செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
  11. வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத்தை வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்.
  12. வருமான வரிக்காக வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 ஆக உயர்த்தப்படும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வொஓதியகாரகள் பெற்றிடும் ஓய்வூதியம் வருமான வரியிலிருந்து விலக்கப்படும்.
  13. ஜி.எஸ்.டி வரிவிகிதம் உரிய முறையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  14. சிறு,குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
  15. முல்லை ஏரியாறு மற்றும் காவிரி ஆறு மற்றும் மேகதாதுவில் புதிய அணைகள் காட்டும் முயற்சிகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.
  16. தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  17. 1976ல் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி, மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.
  18. மருத்துவ படிப்புகளில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.
  19. மாணவர்கள் பெற்றுள்ள கல்வி கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  20. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  21. தனியார் நிறுவங்களிலும் வேலை வாய்ப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  22. 10-ம் வகுப்பு படித்துள்ள 50 லட்சம் பெண்கள் கிராம பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  23. கிராமப பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.
  24. 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தாமதமில்லாமல் குடியுரிமை வழங்கப்படும்.
  25. நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்க வரி வசூல் உரிமம் முடித்த பின்பும், வசூலிக்கப்படும் சுங்க கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.
  26. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயண சலுகை வழங்கப்படும்.
  27. சென்னைக்கு அடுத்த பிரியா மாநிங்களான, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  28. கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும், மேலும் அங்கு கண்டறியப்படும், அருங்கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  29. புயல் நிவாரண உதவிகளுக்காக நிதி நிலை அறிக்கையில், 0.5% நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் கட்டி தரப்படும்.
  30. இயற்க்கை சீற்றத்திலிருந்து கடலோர மக்களை பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
  31. கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும், சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ்  குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
  32. சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற நிலையில் வெளியிடும், ஆபாச செய்திகள் மற்றும் படங்களால் பெருகிவரும் பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் இயற்றப்படும்.
  33. காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சீறாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
  34. நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிட வலியுறுத்தப்படும்.
  35. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். வேலைநாட்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 150-ஆக உயர்த்தப்படும்.
  36. வேலையில்லா திண்டாட்டதை போக்க மத்திய, மாநில அரசு நிறுவங்கள் அனைத்திலும், சென்ற 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் நிரப்பப்படும்.
  37. கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள செத்து சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  38. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாக்கவும், மதங்களிடையே நல்லுறவை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  39. 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  40. அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.
  41. பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை கடத்தல் மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  42. தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
  43. ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

2 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

3 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

3 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

6 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

6 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

6 hours ago