மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து,இலவச ரயில் பயணம்.!திமுக தேர்தல் அறிக்கையின் முழு விவரம் இதோ….
மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், தமிழிலேயே செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
- வேளாண்மை துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
- மத்திய அரசின் வருவாயில் 60% மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சியடைய நிதி பங்கீடு செய்யப்படும்.
- மத்திய நிதிக்குழுவின் அமைப்பும், அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.
- மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
- தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தப்பட்சம் ரூ.8000-ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பாஜக அரசால் சிதைந்து போன இந்தியா பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.
- தனிநபர் வருமான ஆண்டுக்கு ரூ.86,689-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல்,எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நிர்வகிக்கப்பட்ட விலைமுறை கொண்டுவரப்படும்.
- சமையல் எரிவாயுக்கான மானிய தொகை வாங்கி கணக்கில் திரும்ப செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
- வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத்தை வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்.
- வருமான வரிக்காக வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 ஆக உயர்த்தப்படும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வொஓதியகாரகள் பெற்றிடும் ஓய்வூதியம் வருமான வரியிலிருந்து விலக்கப்படும்.
- ஜி.எஸ்.டி வரிவிகிதம் உரிய முறையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிறு,குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
- முல்லை ஏரியாறு மற்றும் காவிரி ஆறு மற்றும் மேகதாதுவில் புதிய அணைகள் காட்டும் முயற்சிகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.
- தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 1976ல் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி, மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.
- மருத்துவ படிப்புகளில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.
- மாணவர்கள் பெற்றுள்ள கல்வி கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
- தனியார் நிறுவங்களிலும் வேலை வாய்ப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- 10-ம் வகுப்பு படித்துள்ள 50 லட்சம் பெண்கள் கிராம பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
- கிராமப பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.
- 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தாமதமில்லாமல் குடியுரிமை வழங்கப்படும்.
- நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்க வரி வசூல் உரிமம் முடித்த பின்பும், வசூலிக்கப்படும் சுங்க கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.
- பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயண சலுகை வழங்கப்படும்.
- சென்னைக்கு அடுத்த பிரியா மாநிங்களான, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும், மேலும் அங்கு கண்டறியப்படும், அருங்கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- புயல் நிவாரண உதவிகளுக்காக நிதி நிலை அறிக்கையில், 0.5% நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் கட்டி தரப்படும்.
- இயற்க்கை சீற்றத்திலிருந்து கடலோர மக்களை பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
- கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும், சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
- சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற நிலையில் வெளியிடும், ஆபாச செய்திகள் மற்றும் படங்களால் பெருகிவரும் பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் இயற்றப்படும்.
- காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சீறாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
- நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிட வலியுறுத்தப்படும்.
- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். வேலைநாட்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 150-ஆக உயர்த்தப்படும்.
- வேலையில்லா திண்டாட்டதை போக்க மத்திய, மாநில அரசு நிறுவங்கள் அனைத்திலும், சென்ற 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் நிரப்பப்படும்.
- கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள செத்து சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாக்கவும், மதங்களிடையே நல்லுறவை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.
- பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை கடத்தல் மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
- ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.