தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு பதிவானவாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவரப்படி,திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.தற்பொழுது லயோலா கல்லூரி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கான வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…