கோமதி மாரிமுத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 இலட்சம் மற்றும் 4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.