பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை.!
பெரியாரின் 142 பிறந்த நாளை முன்னிட்டு அவரது, சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ. ராமசாமி இவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவது, சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார். இன்று இவரது 142 பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17. சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம் சுயமரியாதைச் சுடர் வெல்க என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17!
சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!சுயமரியாதைச் சுடர் வெல்க!#HBDPeriyar142 #PeriyarForever pic.twitter.com/LdeMyqRNFy
— M.K.Stalin (@mkstalin) September 17, 2020